அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி நீக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், '' கட்சியின் கொள்கை குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டு, கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும்,
அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்டதாலும் சேலம் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி, இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செல்வகணபதி கூறுகையில், "இந்த இயக்கத்தில் கடுமையாக உழைத்தவர்கள் ஓரம் கட்டப்படுவதும், ஒதுக்கி வைக்கப்படுவதும், ஏன் நீக்கப்படுவதும் ஜெயலலிதாவின் அரசியல் பாணி தான்'' என்றார்.