Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரசுடன் இணைந்துள்ள தி.மு.க.வுடன் உறவு கிடையாது: தா.பா‌ண்டிய‌ன்!

காங்கிரசுடன் இணைந்துள்ள தி.மு.க.வுடன் உறவு கிடையாது: தா.பா‌ண்டிய‌ன்!
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (17:47 IST)
''தமிழக‌த்‌‌‌தி‌ல் காங்கிரசுடன் இணைந்துள்ள தி.ு.க.வுடன் உறவு கிடையாது'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறினார்.

webdunia photoFILE
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அகில இந்திய பொதுச்செயலாளர் பரதன், இந்திய துணை பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசிய கட்டுப்பாட்டு குழுத்தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தா.பா‌ண்டிய‌ன் கூறுகை‌யி‌ல், காங்கிரசுடன் இணைந்துள்ள தி.ு.க.வுடன் உறவு வைத்துக் கொள்ள இயலாது. பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத கூட்டணி மத்தியில் அமைக்கப்படும். எந்தெந்த கட்சியுடன் இணைவது என்பதை இடதுசாரி கட்சிகள் பேசி முடிவெடுக்கும்.

விசைத்தறி தொழிலாளர்கள் 4 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். மத்திய அரசு எந்த ஒரு கட்டுப்பாடின்றி பருத்தியை ஏற்றுமதி செய்தது. நூல்விலை ஏற்றத்தால், கூட்டுறவு சங்கம் கேட்கும் விலைக்கு சேலைகளை தொழிலாளர்களால் தயார் செய்து கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் கஞ்சி தொட்டி தொடங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும்.

தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு, அவை தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதை தவிர்த்து, அதை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

காவிரிக்கும், கர்நாடகா முதல்வருக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. கர்நாடகா தொழிற்சாலைகளிலா காவிரியை தயாரிக்கின்றனர். தமிழகத்திற்கு இயற்கை தந்த வரப்பிரசாதம் காவிரி. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைய, அரசுக்கு உறுதுணையாக இருப்போம் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil