Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌நில ஆ‌க்‌கிர‌மி‌ப்பை‌க் க‌‌ண்டி‌த்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!

‌நில ஆ‌க்‌கிர‌மி‌ப்பை‌க் க‌‌ண்டி‌த்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!
, ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 (14:53 IST)
மத்திய பல்கலைக்கழகம் அமைக்க திருவாரூர் மாவட்ட‌த்‌தி‌ல் ‌நில‌ம் ஆ‌க்‌கிர‌‌மி‌ப்பு செ‌ய்வதை‌க் க‌ண்டி‌த்து‌ம், அ‌ம்முயற்சியை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும் அ.இ.அ.‌ி.ு.க. சார்பில் வரு‌ம் 26ஆ‌ம் தே‌தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பல்கலைக்கழகம் அமைக்க திருவாரூர் மாவட்டம்,கொரடாச்சேரி ஒன்றியம், பெரும்புகழுர், நீலக்குடி, தியாகராஜபுரம், பொம்மாநத்தம், கருணாகர நல்லூர், வண்டாம்பாளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 700 ஏக்கர் விவசாய விளை நிலங்களை ஏழை, எளிய மக்களிடமிருந்து அபகரிக்கும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது. மேற்படி நிலங்களில் ஆண்டுதோறும் இரண்டு போகம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இ‌ந்த ‌நில ஆ‌க்‌கிர‌மி‌ப்பை‌க் கண்டித்தும், நில அபகரிப்பு முயற்சியை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், திருவாரூர் மாவட்ட அ.இ.அ.‌தி.மு.க. சார்பில், 26ஆ‌ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் தெற்கு வீதி, கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil