Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 3-வது அணி: கம்யூனிஸ்‌ட்

தமிழகத்தில் 3-வது அணி: கம்யூனிஸ்‌ட்
, ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 (12:14 IST)
தமிழக‌த்‌தி‌ல் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் இல்லாத 3-வது அணியை அமைப்போம் என்று கம்யூ‌‌னிஸ்டு கட்சிகள் அறிவித்து உள்ளன.

சென்னையில் கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ‌தீ‌ர்மான‌த்‌தி‌ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இடதுசாரி கட்சிகளும் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடுகள் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிர் வினையாக எழுந்தவை. இந்த பின்னணியை கவனத்தில் கொள்ளாமல் தமிழக அரசியல் நிலைமையை தனிமைப்படுத்திப் பார்ப்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை எந்த கட்டத்திலும் மதவாத பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டதில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் அமைந்த காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளை பா.ஜ.க.வும், காங்கிரசும் கைகோர்த்துத்தான் கவிழ்‌த்திருக்கிறார்கள் என்பது மு‌ந்தைய வரலாறு.

இப்போதும், வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு இடமளிக்கிற எந்த போக்கையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடைபிடிக்கவில்லை. தமிழகத்திலும், பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத ஒரு 3-வது அண‌யியை முன்னெடுத்து செல்ல தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்.

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் சட்டப்படியான கூலி ரூ.80 வழங்க வேண்டும். ரெட்டணையில் துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் போ‌ன்ற கோ‌ரி‌க்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 27ஆ‌ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தீர்வுகாண மாநில அரசு முழு கவனத்துடன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் உ‌ள்‌ளி‌ட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்‌ட் முடிவு: இதேபோ‌ல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய மா‌‌நில செய‌ல‌ர் தா.பா‌ண்டிய‌ன், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் ப‌ற்‌றி கூறுகை‌யி‌ல், "தி.மு.க.வினரால் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடியும். ஆனால் எங்களால் அவர்களுடன் கூட்டணி வைத்து இருக்க முடியாது.

ஆகையா‌ல் நாங்கள் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து விலகி எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய கூட்டணியை அமைக்க இருக்கிறோம். அதில் வெற்றி, தோல்வி பற்றி எங்களுக்கு எந்த வித கவலையும் இல்லை" எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil