அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஆண்டிபட்டி பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் மலர்விழி, முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று தி.மு.க.வில் சேர்ந்தார்.
சமீபத்தில் மதுரையில் முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட மலர்விழி, கருணாநிதி காலில் விழுந்து ஆசி பெற்றார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தி.மு.க.வில் சேர மலர்விழி விருப்பப்பட்டார். தனது விருப்பத்தை நேற்று மாலை மதுரையில் அழகிரியைச் சந்தித்து தெரிவித்தார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த மலர்விழி, சால்வை அணிவித்து தி.மு.க.வில் சேர்ந்தார்.