Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிருஷ்ண ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து!
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (17:15 IST)
கண்ணனின் திருவருளால், தீயவை அகன்று, நன்மை செழித்து அனைவரும் ஆனந்த வாழ்வு வாழ வேண்டும் எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ாள‌ர் ஜெயல‌‌‌லிதா கிருஷ்ண ஜெயந்தி வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கோகுலத்து கோமகனாம், கண்ணன் அவதரித்த நன்னாளான கிருஷ்ண ஜெயந்தி திருநாளை ஆர்வத்தோடும், மகிழ்வோடும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனம், மொழி, மதம், சாதியற்ற பாதையின் மூலம் பாமர மக்களுக்கு வாழ்க்கை முறையை வகுத்துக் கொடுத்து துன்பத்தில் இன்பம் காண வைக்கும் ஞான ரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்ததிற்கு உப தேசித்தவர் பகவான் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் அவதரித்த இந்த நன்னாளில் மண்ணைத் தின்று வாயில் விண்ணை காண்பித்த கண்ணனின் திருவருளால், தீயவை அகன்று நன்மை செழித்து அனைவரும் ஆனந்த வாழ்வு வாழ வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்" எ‌ன்று கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil