பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதிக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி சென்னைப் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆளுநரும், சென்னை பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இவ்விழாவில் அவர்களின் அரசியல், பொதுநலச்சேவையை பாராட்டி சென்னை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டத்தை ஆளுநர் பர்னாலா வழங்குகிறார்.