நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத அப்பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 21ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அ.இ.அ.தி.மு.க. நீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில் வரும் 21ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் நடுவட்டம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு நடுவட்டம் பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்து அங்கு மபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.