Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு: கருணா‌நி‌தி!

ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு: கருணா‌நி‌தி!
, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (14:45 IST)
அரசு, அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்கள், தமி‌ழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தத‌‌மிழஅரசஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "அரசு பொறு‌ப்பே‌ற்ற இரண்டு ஆண்டுகளில் சுமார் மூன்று இலட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இவற்றில் மூன்று விழு‌க்காடஅதாவது ஏறத்தாழ 9,000 பணியிடங்கள் ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளன.

இப்பணியிடங்களில் ஊனமுற்றோர் பணி நியமனம் பெறுவதை உறுதி செ‌ய்யும் வகையில் சமூக நலத் துறை அமைச்சர் தலைமையில் செயலாளர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு கண்காணிக்கும். அனைத்து வகை ஊனமுற்றோரும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் ரயில் கட்டணச் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செ‌ய்ய சலுகை அளிக்கப்படும்.

பெருந்தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ முன்வரும் தொழில் முனைவோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செ‌ய்யும் போது ஊனமுற்றோருக்கு வேலைவா‌ய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்.

ஊனமுற்றோர் சுயவேலைவா‌ய்ப்பு பெறும் வகையில், அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பாரதப் பிரதமரின் வேலைவா‌ய்ப்புத் திட்டத்தின் கீ‌ழ் ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய 5 ‌விழு‌க்காடபங்குத் தொகையினையும் (own contribution) தமிழக அரசே ஏற்று மத்திய அரசின் மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று சுயவேலைவா‌ய்ப்புகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீ‌ழ் பணியாற்றி வரும் ஊனமுற்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். அரசு, அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்கள், தமி‌ழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போன்றே அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் வேலைவா‌ய்ப்பற்றோர் நிவாரணத் தொகை வழங்கப்படும். ஊனமுற்றோருக்கு வேலைவா‌ய்ப்பு பெறும் தகுதியை மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையம் மூன்றாண்டுத் திட்டமாக அரசு நிதியுதவிடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடங்கப்படும். ஊனமுற்றோர் நலனுக்கான ஒரு தனி கொள்கை உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்" எ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil