Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊனமுற்ற அரசு ஊழியர்களு‌க்கு சலுகை: கருணாநிதி உத்தரவு!

ஊனமுற்ற அரசு ஊழியர்களு‌க்கு சலுகை: கருணாநிதி உத்தரவு!
, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (11:02 IST)
தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் அனைவரும் அலுவலக நேரம் முடிந்து பேரு‌ந்துகளில் நெரிசலில் சிக்காமல் பயணிப்பதற்கு வசதியாக, 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லலாம் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு‌ள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் அனைவரும் அலுவலக நேரம் முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது கூட்ட நெரிசல் காரணமாக பேரு‌ந்துகளில் பயணம் செய்வதில் மிகுந்த இடர்பாடுகளுக்கு ஆளாகின்றனர்.

இதனா‌ல், பார்வையற்ற, உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள், பேரு‌ந்துகளில் நெரிசல் இன்றி ஏறி செல்வதற்கு வசதியாக, அவர்கள் தங்கள் அலுவலகப் பணி நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்பாகவே அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்கு அனுமதி வழங்கி முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil