Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இருதய அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட 11 குழ‌ந்தைக‌ள் கருணா‌நி‌தி‌க்கு ந‌ன்‌றி!

இருதய அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட 11 குழ‌ந்தைக‌ள் கருணா‌நி‌தி‌க்கு ந‌ன்‌றி!
, திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (15:17 IST)
த‌மிழக அர‌சி‌ன் பள்ளிச் சிறார்கள் இருதய அறுவை சிகிச்சைத் திட்டத்தின் கீ‌‌ழ் அறுவை சிகிச்சை செ‌ய்து கொண்ட திண்டுக்கல் மாவட்ட சே‌‌ர்‌ந்த 11 குழ‌ந்தைக‌ள் த‌ங்க‌ள் பெற்றோருடன் முதலமைச்சர் கருணா‌நி‌தி‌க்கு இ‌ன்று நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து நன்றி தெரிவி‌த்து‌க் கொ‌ண்டன‌ர்.

முதலமைச்சர் கருணா‌நி‌தி ‌பிற‌ந்த நா‌ன் அ‌ன்று பள்ளிச் சிறார்கள் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் என்ற ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீ‌ழ் ஜூன் மாதம் முடிய சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு பள்ளிகளுக்குச் சென்று
சோதனைகள் நடத்தி 9,986 பள்ளி மாணவர்கள் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள விவரம் கண்டறிந்து, அவர்களில் 2,396 பள்ளி மாணவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை தேவை என பரிந்துரை செ‌ய்தது.

இ‌ச்சிறார்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட 17 தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செ‌ய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை 162 பள்ளிச் சிறார்களுக்கு இருதய அறுவை சிகிச்சைகள் செ‌ய்யப்பட்டுள்ளன. எஞ்சிய பள்ளிச் சிறார்களுக்கும் இருதய அறுவை சிகிச்சை செ‌ய்ய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இ‌ந்த திட்டத்தை செயல்படுத்தப்படுவதில் திண்டுக்கல் மாவட்டம் இதுவரை 30 இளம் சிறார்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செ‌ய்து முன்னோடியாக விளங்குகிறது. ஏழைச் சிறார்களுக்கான இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் மற்றும் பள்ளிச் சிறார்களுக்கான இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின் மூலமாக இதுவரை 456 இளம் சிறார்களுக்கு இருதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செ‌ய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் முன்னோடியாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை செ‌ய்து கொண்ட பள்ளிச் சிறார்களில் 11 பேர் தங்கள் பெற்றோருடன், முதலமைச்சர் கருணா‌நி‌தியை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து நன்றியைத் தெரிவித்தனர். அப்பொழுது இருதய மருத்துவ சிகிச்சை செ‌ய்து கொண்டு குணம் அடைந்துள்ள சிறார்களுக்கு முதலமைச்சர் கருணா‌நி‌தி ா‌ழ்த்து தெரிவித்தார் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil