இந்தியாவில் முதன்மை கராத்தே மாணவர்களின் ஒருவரும் சிறந்த பயிற்சியாளராகவும் திகழ்ந்த சென்சாய் ஆர்.யுவராஜ் மரணம் அடைந்தார்.
சென்னை ரிசர்வ் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்த யுவராஜ், சேலத்தில் தனது பணியை முடித்துக் கொண்டு கொல்லிமலையில் உள்ள சித்தர் சமாதி ஒன்றிற்கு சென்றிருந்தபோது அவர் உயிர் நீத்தார். மூச்சித் திணறல் ஏற்பட்டு, இதனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு பிரபல கராத்தே பயிற்சியாளர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், அவருடைய மாணவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இன்று மதியம் பெசன்ட் நகர் மயானத்தில் யுவராஜின் உடல் தகனம் செய்யப்படுகிறது.