திருச்சியில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.
இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குடமுருட்டி என்ற இடத்தில் அந்த இரண்டு சக்கர வாகனம் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதிய இந்த விபத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மகேந்தன் (42), சேகர்(36) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவரான பார்த்திபன்(29) என்பவர் படுகாயமடைந்தார். அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.