''காங்கிரஸ் தயவு இன்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.
விருதுநகரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் காங்கிரசுக்கு 20 விழுக்காடு வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இணைந்து பணியாற்றி வாக்கு விகிதத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலங்களில் மகத்தான சாதனைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.41 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. அன்னிய முதலீடுகள் ரூ.26 ஆயிரம் கோடி வரை வந்துள்ளது என்று தங்கபாலு கூறினார்.