அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணி என்பவர் விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் கேட்டு கடந்த ஆண்டு உச்சநீதிமனறத்தில் அளித்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு, தமிழக உள்துறை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தும், அவருடைய கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல உதவியாக ரூ.1 லட்சம் உடனடியாக வழங்கப்படும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்தை உடனுக்குடன் அரசு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.