சென்னை கிண்டியில் ரூ.120 கோடி செலவில் அமைய உள்ள பிரம்மாண்டமான நவீன நூலக கடடடத்திற்கான அடிக்கால் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையில் சர்வதேச தரத்தில் பிரமாண்டமான நவீன நூலகம் கட்டப்படும் என்று சட்டபேரவையில் அரசு அறிவித்தது. அதன்படி, புதிய நூலகம் கட்டுவதற்காக சென்னை கிண்டி கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரூ.120 கோடி செலவில் இந்த புதிய நவீன நூலகதத்தை சர்வதேச தரத்தில் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நூலகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா, கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மைய வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டுகிறார்.
இந்த நவீன நூலகம் 8 ஏக்கர் பரப்பில் 8 அடுக்குகளாக கட்டப்பட உள்ளது. அதிநவீன வசதிகள் பொருந்திய இந்த நூலகம் ஆசியாவிலேயே 2-வது மிகப் பெரிய நூலகமாகவும், தெற்காசியாவில் பெரிய நூலகமாகவும் விளங்கும்.