Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.20‌க்கு சா‌ப்பாடு வழ‌ங்க‌ப்படு‌கிறதா? க‌ண்கா‌ணி‌க்க அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு உ‌த்தரவு!

ரூ.20‌க்கு சா‌ப்பாடு வழ‌ங்க‌ப்படு‌கிறதா? க‌ண்கா‌ணி‌க்க அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு உ‌த்தரவு!
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (18:34 IST)
''உணவகங்களில் சிற்றுண்டியின் விலை 10லிருந்து 15 ‌விழு‌க்காடவரை குறைக்கப்பட்டுள்ளதா என்றும் 20 ரூபா‌மலிவு விலை சாப்பாடு தொடர்ந்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றதா எ‌ன்று‌ம் அ‌திகா‌ரிக‌ள் கண்காணிக்க வேண்டும்'' எ‌ன்று உணவு அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

ெ‌ன்னதலைமைச் செயலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து உணவஅமை‌ச்ச‌ர் எ.வ.வேலஇ‌ன்றநடத்‌தினா‌ர். அ‌ப்போதஅவ‌ரபேசுகை‌யி‌ல், பொது விநியோகத் திட்டத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் அனுப்பப்பட்டும், விற்பனையாளர்கள் இருப்பு இல்லை என்று தெரிவிப்பதாக புகார்கள் பெறப்பட்டால் உடனடியாக அத்தகைய விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் விசாரணை செ‌ய்தநடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய அளவில் பொருட்கள் வழங்க வேண்டும். 20 கிலோ அரிசி வழங்கப்படவேண்டிய குடும்ப அட்டைகளுக்கு அளவு குறைத்து வழங்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நியாய விலைக் கடைகளில் இருப்பு இல்லை என்று புகார்கள் பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் விற்பனையாளர்கள் மீதும் தக்க நடடிவக்கை எடுக்க வேண்டும் என்று
வலியுறுத்தினார்.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், இதை கண்காணிக்கவும் வலியுறுத்தினார். ஒவ்வொரு வட்டத்திலும் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் போது பெறப்படும் புகார்களை உடனுக்குடன் தீர்வு செ‌ய்ய‌ப்பவேண்டும். காலதாமதமின்றி புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

புதிய குடும்ப அட்டைகளை விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் வழங்கப்படவேண்டும் என்றும் விலாசம் மாற்றம், பெயர் மாற்றம், மண்டல மாற்றம் மற்றும் பெயர் சேர்த்தல் / நீக்குதல் போன்றவைகள் காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும் அல்லது உரிய பதில் அனுப்பப்படவேண்டும். இப்பணிகளை சரியாக செ‌ய்யாத அலுவலர்கள் கடமை தவறியவர்களாக கருதப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உதவி ஆணையாளருக்கு அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார்கள்.

போலி குடும்ப அட்டைகளாக இருக்கும் என்று கருதினால் முதலில் பொருள் நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் முறையீடு செ‌ய்ா‌ய்ப்பளிக்கப்படுகிறது. மேல்முறையீட்டு அலுவலர்கள் மீண்டும் விசாரணை செ‌ய்தபோலி குடும்ப அட்டை தான் என்று உறுதிபடுத்தினால் அத்தகைய குடும்ப அட்டைகள் ரத்து செ‌ய்யப்பட வேண்டும்.

உணவகங்களில் சிற்றுண்டியின் விலை 10லிருந்து 15 ‌விழு‌க்காடவரை குறைக்கப்பட்டுள்ளதா என்றும் 20 ரூபா‌மலிவு விலை சாப்பாடு தொடர்ந்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் எ‌ன்றஅமை‌‌ச்ச‌ரஅ‌றிவுறு‌த்‌தினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil