தமிழக அரசின் சிறப்பு தலைமைச் செயலராக உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.எஸ். ஸ்ரீபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் சிறப்பு தலைமை செயலராக ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியமன தேதியில் இருந்து மூன்று மாதங்கள் அல்லது தேவைப்படும் வரை இந்த பதவி வகிப்பார்.
இவர் அரசு சம்பந்தமாக தலைமை செயலாளர் திரிபாதி பங்கேற்கும் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்பார். அரசு கோப்புகளையும் தாக்கல் செய்வார். தற்போது வகித்து வரும் லஞ்ச ஒழிப்பு ஆணையர் பொறுப்பிலும் நீடிப்பார். இதற்கான உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.