பொதுப்பணித்துறையைச் சேர்ந்த 11 தலைமைப் பொறியாளர்களுக்கு ரூ.55 லட்சம் செலவில் புதிய வாகனம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுப்பணித் துறை, நீர்வள ஆதார அமைப்பு மற்றும் கட்டட அமைப்புகளைச் சார்ந்த 11 தலைமைப் பொறியாளர்களுக்கும் தற்போது பயன்படுத்தி வரும் வாகனங்கள் அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு பழையனவாக உள்ளதால் அவைகளுக்குப் பதிலாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் புதிய வாகனம் ரூ.55.30 லட்சம் செலவில் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள முதன்மை தலைமைப் பொறியாளர், ஆறு தலைமைப் பொறியாளர்கள், நான்கு மண்டலங்களைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர்களுக்கும் மொத்தம் 11 வாகனங்கள் வழங்கப்படுகிறது.
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு விரைந்து செல்வதற்கும், திறம்பட பணியாற்றும் வகையிலும் இந்த வாகனங்கள் வழங்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.