Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுதந்திரதின விழா: கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Advertiesment
சுதந்திரதின விழா: கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்!
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (11:09 IST)
சென்னை கோட்டையில் நாளசுதந்திர தினவிழா நடைபெறுவதையொ‌ட்டி அன்று காலை 6.30 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது தொட‌ர்பாக போக்குவரத்து காவ‌ல்துறை‌ வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், நேப்பியர் பாலத்திலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கம்வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடி மரச்சாலைஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எப்.எஸ். சாலை வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.

அதேபோல் பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் என்.எப்.எஸ். சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

முத்துசாமி பாலம், அண்ணா சாலையிலிருந்து பாரிமுனை, காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் என்.எப்.எஸ். சாலை வழியாக பாரிமுனையையும், அண்ணா சாலை சுவாமி சிவானந்தா சாலை வழியாக காமராஜர் சாலையையும் வந்தடையலாம்.

சிவப்பு வண்ண வாகன அடையாள அட்டை வைத்திருப்போர், காலை 8 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் வெளிப்புறம் இறங்கிக் கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் இதே அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 8 மணிக்கு பின் கொடிமரச் சாலை, ஜார்ஜ் கேட் வழியாக கோட்டையை அடைய வேண்டும்.

நீல வண்ண வாகன அட்டை வைத்திருப்போர், கொடிமரச் சாலை ஜார்ஜ் கேட் வழியாகவோ அல்லது முத்துசாமி பாலம், எஸ்பிளனேட் சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கபாதை வழியாக சென்று தலைமைச் செயலக வெளி வாயிலில் இறங்கிக் கொண்டு, வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிர்புறம் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர், போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக் கொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்த வேண்டும்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் மாநகர பேருந்துகள், மாணவர்களை போர் நினைவுச் சின்னம் அருகே இறக்கிவிட்ட பின் அண்ணா சாலை, மன்றோ சிலை அருகில் வாகனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil