Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரையில் நா‌ளை கடவு‌ச்‌சீ‌ட்டு குறை தீர்ப்பு முகாம்!

Advertiesment
மதுரையில் நா‌ளை கடவு‌ச்‌சீ‌ட்டு குறை தீர்ப்பு முகாம்!
, புதன், 13 ஆகஸ்ட் 2008 (12:03 IST)
மதுரையிலுள்ள கட‌வு‌ச்‌சீ‌ட்டஅலுவலகத்தில் நாளை கடவு‌ச்‌சீ‌ட்டகுறை தீர்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

கடவு‌ச்‌சீ‌ட்டு (பா‌‌ஸ்போ‌ர்‌ட்) பெறுவதற்காக மதுரை அலுவலகத்தில் 2008 ஏ‌ப்ர‌ல் 30ஆ‌மதேதிக்கு முன்பாக விண்ணப்பித்து இதுவரை கடவு‌ச்‌சீ‌ட்டகிடைக்கப் பெறாதவர்கள் நாளை (14ஆ‌ம் தே‌தி) நடைபெற உ‌ள்ள இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

அ‌ன்றைய‌‌தின‌ம் விண்ணப்பதாரர்கள், விசாரணைப் படிவத்தை நிரப்பி கடவு‌ச்‌சீ‌ட்டஅலுவலகத்திலுள்ள விசாரணை அலுவலரிடம் அளிக்க வேண்டும். அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணிவரை அதிகாரிகள் விண்ணப்பதாரர்களின் குறைகளை கவனிக்க உள்ளனர்.

பரிசீலனைக்கு பின்பு தகுதியுள்ளவர்களுக்கு கடவு‌ச்‌சீ‌ட்டஅளிக்கப்படும். மூன்று மாதத்திற்கு முன்பு விண்ணப்பித்து, இதுவரை எந்த தகவலும் கிடைக்கப் பெறாதவர்கள் மட்டுமே குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்க முடியும் என்று மதுரை கடவு‌ச்‌சீ‌ட்டஅலுவலர் சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil