Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

19 பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழ‌ங்‌கினா‌ர்!

Advertiesment
19 பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழ‌ங்‌கினா‌ர்!
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:11 IST)
பேரூராட்சிகள் துறைக்கு புதியதாக நேரடி நியமனம் செ‌ய்யப்பட்ட 19 இரண்டாம் நிலை பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது கு‌றி‌த்து த‌‌‌மிழக அரசு இ‌ன்று வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "தமி‌ழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2007ஆ‌ம் ஆ‌ண்டு நவ‌ம்ப‌ர் மாத‌ம் 17 ஆ‌ம் தேதியில் எழுத்துத் தேர்வு, 2008ஆ‌ம் ஆ‌ண்டு மா‌ர்‌ச் மாத‌ம் 17ஆ‌ம் தே‌தி முதல் ஏ‌ப்ர‌ல் மாத‌ம் 15 ஆ‌ம் தே‌தி வரை நேரடி தேர்வு நடத்தி 19 இரண்டாம்நிலை பேரூராட்சி செயல் அலுவலர்களை பேரூராட்சிகள் துறைக்கு ஒதுக்கீடு செ‌ய்தது.

மேற்படி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்ட நபர்களுக்கான பணி நியமன ஆணையினை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

நியமன உ‌த்தரவு பெற்ற செயல் அலுவலர்கள் கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, தேனி, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர் ஆ‌கிய மாவட்ட‌ங்களு‌க்கு ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளன‌ர்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil