Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌‌ப்கா‌ட் ‌நிறுவன‌ம் கூடுத‌ல் ‌விலை‌க்கு ‌நில‌‌ங்களை ‌‌வி‌ற்பனை செ‌ய்‌கிறதா? த‌மிழக அரசு ‌வி‌ள‌க்க‌ம்!

‌சி‌‌ப்கா‌ட் ‌நிறுவன‌ம் கூடுத‌ல் ‌விலை‌க்கு ‌நில‌‌ங்களை ‌‌வி‌ற்பனை செ‌ய்‌கிறதா? த‌மிழக அரசு ‌வி‌ள‌க்க‌ம்!
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:09 IST)
''சிப்காட் நிறுவனம் இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு ‌நில‌ங்களவிற்பனை செ‌ய்கிறது என்ற செ‌ய்தியில் எவ்வித அடிப்படை ஆதாரமு‌மஇல்லை'' எ‌ன்றத‌‌மிழஅரசு ‌விள‌க்க‌மஅ‌ளி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாத‌மிழஅரசஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ''தமிழக அரசின் ‘சிப்காட்’ நிறுவனம் பயிரிடமுடியாத தரிசு நிலங்களை மட்டுமே கையகப்படுத்தி புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்துவதற்கு நிலங்களை ஒதுக்கீடு செ‌ய்து வருகிறது. சிப்காட் நிறுவனம் ஏற்கனவே உருவாக்கியுள்ள தொழில் வளாகங்களில் காலியாக உள்ள நிலங்களில் மட்டுமே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதற்கு தேவையான நிலங்களை நில உரிமையாளர்களிடமிருந்து நேரடியாகவே வாங்கி கொள்ள தமிழக அரசோ அல்லது சிப்காட் நிறுவனமோ எந்த தடையும் விதிக்கவில்லை. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் தாங்களாகவே தற்போது நில உரிமையாளர்களிடமிருந்து நேரடியாகவே
நிலங்களை வாங்கி வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்தும்போது அதற்குள்ள இழப்பீட்டுத் தொகை வழிகாட்டு மதிப்பீட்டைவிட அதிகமாகவே நிர்ணயம் செ‌ய்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே குறைந்த விலைக்கு நிலத்தை கையகப்படுத்தி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டு வருவதாக கூறுவது முற்றிலும் தவறு. நிலத்தின் விலையை அந்தந்த மாவட்ட ஆட்சியர் நில உரிமையாளர்களோடும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடும் கலந்து ஆலோசனை செ‌ய்து நில உரிமையாளர்கள் கொடுக்கும் சம்மதத்தின் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செ‌ய்யப்படுகிறது.

சிப்காட் நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தியபின் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி நிலங்களை தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செ‌ய்து வருகிறது. உட்கட்டமைப்பு வசதிகளில் குறிப்பாக, தரமான சாலைகள், தேவையான தண்ணீர், கழிவுநீர் அகற்று வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் தெருவிளக்குகள் போன்றவை ஏற்படுத்த தேவையான நிதியையும் சேர்த்துதான் நிலமதிப்பீடு செ‌ய்யப்படுகிறது.

மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10 விழுக்காடு திறந்த வெளியாகவும், 10 விழுக்காடு உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் மேலும் 10 விழுக்காடு தொழிற்சாலைகளின் பொது பயன்பாட்டிற்காகவும் விடப்பட்டு பராமரிக்கப்படுவதால் மீதமுள்ள 70 விழுக்காடு நிலங்களை மட்டுமே ஒதுக்கீடு செ‌ய்தவருகிறது.

நிலத்தின் அடிப்படை கையகப்படுத்தும் விலை, கையகப்படுத்துவதற்காக நிர்வாகச் செலவு உட்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவினங்கள் மற்றும் கையகப்படுத்த தேவையான தொகையை முன்கூட்டியே செலவு செ‌ய்வதால் அதற்குண்டான வட்டி முதலிய இனங்கள் மட்டுமே இந்த நில மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு நில மதிப்பு நிர்ணயம் செ‌ய்யப்படுகிறது. இதில் எந்தவிதமான இலாப நோக்கமும் இல்லை. சிப்காட் நிறுவனம் இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செ‌ய்கிறது என்ற செ‌ய்தியில் எவ்வித அடிப்படை ஆதாரமு‌மஇல்லை எ‌ன்றத‌மிழஅரசு ‌விள‌க்க‌மஅ‌ளி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil