திருச்சியில் தடை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் உள்ள கருமண்டபம் என்ற இடத்தில் தடை செய்யப்பட்ட கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலத்தின் மதுபாட்டில்கள் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது முருகேசன் (52) என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 மதுபாட்டில்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
தடை செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முருகேசனை காவல்துறையினர் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.