மணப்பாறை அருகே பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ வெடி மருந்து, 28 டெட்டனேட்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது பாப்பாட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ வெடிமருந்துகள், 28 டெட்டனேட்டர்கள் கைப்பற்றினர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் உரிமம் பெறாமல் வெடிபொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தனராஜ் (38) என்பவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.