Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டு வாடகையை த‌‌மிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சர‌த்குமா‌ர்!

வீட்டு வாடகையை த‌‌மிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சர‌த்குமா‌ர்!
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (10:25 IST)
கடுமையாக உயர்ந்து வரும் வீட்டு வாடகையை சீர்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''வீட்டு வசதி வாரியம், மக்கள் நலனை புறக்கணித்து, லாப நோக்கோடு செயல்பட்டு வருகிறது. சென்னை முகப்பேரில் 170 பழைய வீடுகளுக்கு இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்க திட்டமிட்டு, இதுவரை 60 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன.

ஒரு விண்ணப்பம் ரூ.110. பதிவுக் கட்டணம் ரூ.400 எனப் பார்த்தால் 2 லட்சம் விண்ணப்பங்களுக்கு ரூ.10 கோடியே 20 லட்சமாகிறது. 120 வீடுகளின் மொத்த விற்பனைத் தொகையே சுமார் ரூ.11 கோடி என்ற நிலையில் விண்ணப்பங்கள் விற்பனை மூலம் மக்களிடம் இவ்வளவு வசூலிக்கத் திட்டமிடுவது மக்களை ஏமாற்றும் செயல்.

எனவே, குலுக்கலில் வீடு கிடைக்காதவர்களுக்கு விண்ணப்ப விலை தவிர பதிவுக் கட்டணம் ரூ.400ஐ கண்டிப்பாக திருப்பி கொடுக்க வேண்டும்.

மேலும், கடுமையான வாடகை உயர்வால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பல ஆயிரம் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வாடகை உயர்வு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அவர்கள் 5 முதல் 10 ‌‌விழு‌க்கா‌ட்டின‌ர் தான். மீதம் உள்ளவர்கள் சாதாரணமாக சம்பளம் வாங்கும் ஊழியர்கள்தான். இவர்களால் வாடகை உயர்வை தாங்க முடிவதில்லை.

வாகனக் கடன், கல்விக் கடன், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு என பல்வேறு வழிகளில் அவதிப்படும் மக்களை வீட்டு வாடகை உயர்வு மேலும் கசக்கிப் பிழிகிறது. எனவே, வீட்டு வாடகை நிர்ணயிப்பதில் ஒரு நியாயமான நிலையை அரசு உருவாக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை வாடகையை உயர்த்துவதையும் சீர்செய்ய வேண்டும்'' எ‌ன்று சர‌த்குமா‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil