ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தங்களது இந்த மகத்தான வெற்றிக்கு எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச் சுடும் பிரிவில் தங்கம் வென்று, ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் என்ற வரலாறு படைத்ததோடு, இந்தியாவையும் பெருமையடையச் செய்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டுகள். தொடர்ந்து இந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்களால் நாங்கள் அனைவரும் பெருமையடைந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.