தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாரில் 17 செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்ததாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறை, கூடலூர் பஜார் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.