நெல்லையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை உதவி ஆணையர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டக் கல்லூரிகளை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 200க்கு மேற்பட்டவர்கள் இன்று பாரிமுனையில் உள்ள குறளகம் சந்திப்பில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சட்டக் கல்லூரிக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.