சத்தி அருகே பள்ளிக்கு சென்ற மாணவி கழுத்தை இறுக்கி கொலை!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
ஈரோடு அருகே பள்ளிக்கு சென்ற 15 வயது மாணவி கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் உள்ளது சிக்கரம்பாளையம். இங்குள்ள ஆதிதிராவிடர் காலணியில் வசிப்பவர் சக்தி. இவரது மகள் புனிதா (15). இவர் சிக்கரம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி புனிதா வீடு திருப்பவில்லை. இவரது பெற்றோர்கள் உறவினர் வீடு என பலபக்கம் தேடியும் தகவல் இல்லை.
இது குறித்து சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆய்வாளர் மனோகரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார். இதற்கிடையில் நேற்று காணமால்போன புனிதா கொலை செய்யப்பட்டு, சிக்கரம்பாளையம் அருகே உள்ள முட்காட்டில் வீசப்பட்டிருந்தது. புனிதாவின் சீருடையால் அவளது கழுத்தை இறுக்கி கொன்றுள்ளது தெரியவந்தது. உடனே ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் யாரையும் அந்த நாய் பிடிக்கவில்லை.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.