தொட்டியில் விழுந்து குழந்தை சாவு: நேரில் பார்த்த தாயும் தற்கொலை!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
ஈரோடு அருகே கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை இறந்தது. இதனால் மனமுடைந்த தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவருடைய மனைவி அய்யம்மாள் (37). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இருபது வருடங்கள் குழந்தையில்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சரண்யா (5) என்ற மகள் பிறந்தாள். தற்போது ஈரோடு அருகே உள்ள சித்தோடு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சரண்யாவை காணவில்லை. பல இடங்களில் தேவியும் சரண்யாவை காணவில்லை. இது குறித்து சித்தோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். குழந்தை காணாமல் போனதால் வேதனை அடைந்த அய்யம்மாள் நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த சமயத்தில் அருகே உள்ள கழிவுநீர்தொட்டியில் சரண்யாவின் உடல் மிதந்துகொண்டிருந்தது தெரிந்தது. தன்மகள் இறந்து விட்டால் என்ற அதிர்சியில் அய்யம்மாள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.