Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரங்குகளுக்கு "திண்பண்டம்" கொடுக்க வேண்டாம் : மாணவ‌ர்௦க‌ள் வேண்டுகோள்!

ஈரோடு வேலு‌‌ச்சா‌மி

குரங்குகளுக்கு
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (14:08 IST)
குரங்குகளுக்கு திண்பண்டம் கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளி ‌மாணவ‌ர்களு‌க்கு விழிப்புணர்வு முகாம் நட‌த்த‌ப்ப‌ட்டது!

இந்தியா வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் சத்தி சுடர் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து குரங்குகளுக்கு திண்பண்டங்கள் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் குரங்கு வகைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் சத்தி சாரு மெட்ரிக் மேல்நிலைபபள்ளியில் நடந்தது.

webdunia photoWD
முகாமிற்கு வந்த அனைவரையும் பள்ளி முதல்வர் ருக்குமணி சாமியப்பன் வரவேற்றார். விழாவிற்கு சத்தி வனத்துறை ரேஞ்சர் மணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கடந்த காலங்களில் 30 சதவீதம் இருந்த வனப்பகுதி தற்போது 17 சதவீதமாக குறைந்துள்ளது.

இதனால் மக்களுக்கு இயற்கையாக பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றது என்றார். இதையடுத்து சுடர் தொண்டு நிறுவன செயலாளர் நடராஜ் பேசினார். பின் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை பொறுப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் குரங்குகளின் வகைகள் குறித்தும், குரங்குகளுக்கு திண்பண்டங்கள் போடுவதால் அவைகள் எப்படி பாதிக்கிறது இதனால் மனிதன் எப்படி பாதிக்கிறான் என்பது குறித்து படக்காட்சிகள் மூலம் விளக்கினார். பின் மாணவ, மாணவிகள் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

இதையடுத்து இந்திய அறிவியல் கழகத்தின் பிர‌திநிதியும் வனவியல் ஆய்வாளருமான கண்ணன் சிறப்புரையாற்றினார். முடிவில் பள்ளி குழந்தைகளுக்கு குரங்குகளுக்கு திண்பண்டம் கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி குரங்கு படம் போட்ட பொம்மைகளை முகமூடியாய் அணிந்து உறுதிமொழி எடுத்தனர்.

இந்த பள்ளி மாணவ, மாணவியர் முகமூடி அணிந்தவாறு பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியில் பள்ளி ஆசிரியை கண்ணகி நன்றி கூறினார். விழாவில் சத்தி வனவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil