தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.