''தமிழக மீனவர்களுக்கு விரைவில் அடையாள அட்டைகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தமிழக காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு, அடையாள அட்டை வழங்கவும், சிறிலங்க பகுதி கடலில் மீன்பிடிக்கவும் அனுமதி பெற்று வந்துள்ள பிரதமருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்குப் பயன்படும் இந்த அடையாள அட்டைகளை விரைவில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக கூடுதல் கடற்கரை பாதுகாப்புப் படை, கப்பற்படையினை அப்பகுதிகளில் நிறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.