முதலமைச்சர் கருணாநிதியின் துணை செயலாளராக இருந்த எம்.எஸ்.சண்முகம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயராஜ் குமார், அயல்நாட்டுக்கு பயிற்சிக்கு செல்ல இருப்பதால், அந்த பதவியில் சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் கூடுதல் செயலாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.