புதிய தமிழக சட்டப்பேரவைக் கட்டட வளாகத்தில் அமைய உள்ள பி-பிளாக் பணிகள் பற்றி கணினி வழியாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜி.எம்.பி. இண்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர்கள் முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று விளக்கினர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய சட்டப்பேரவைக் கட்டட வளாகத்தில் அமைய உள்ள பி-பிளாக் பகுதியில் 30 அரசுத் துறைகள் செயல்பட உள்ளது.
இதற்கான பணி குறித்து, ஜெர்மன் கட்டடக் கலை நிபுணர்கள் கணினி வழியாக விரிவாக விளக்கம் அளித்தனர்.
அப்போது, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.