Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமூக ‌நீ‌தி அனைவரு‌க்கு‌ம் செ‌ன்றடைய தொகுப்பு இட ஒதுக்கீடு தேவை: கோ.க.மணி!

சமூக ‌நீ‌தி அனைவரு‌க்கு‌ம் செ‌ன்றடைய தொகுப்பு இட ஒதுக்கீடு தேவை: கோ.க.மணி!
, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (09:55 IST)
''சமூகநீதி அனைவரையும் சென்றடைய தொகுப்பு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்'' எ‌ன்று ா.ம.க தலைவர் கோ.க.மணி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ஒவ்வொரு குடும்பத்து‌க்கு‌ம் சமூக நீதி சென்றடைய வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பங்கீடு கிடைக்க தொகுப்பு இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் எ‌ன்று ‌கோ.க.ம‌ணி கூ‌றினா‌ர்.

ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள இட ஒதுக்கீட்டை பிரித்து, அதில் உள்ள ாதிகளுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் பங்கிட்டு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எ‌ன்று அவ‌ர் யோசனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், இதற்காக சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் எ‌ன்று‌ம் இதே ஒதுக்கீட்டு முறையை பதவி உயர்வுகளுக்கும் வழங்க வேண்டும் எ‌ன்று‌ம் ‌கோ.க.ம‌ணி கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

த‌ற்போது கர்நாடகம், ஆந்திரம், கேரளா ஆகிய மாநிலங்களில் இ‌ந்தமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எ‌ன்று த‌ெ‌ரிவ‌ி‌த்த அவ‌ர், இட ஒதுக்கீட்டில் 'கிரீமிலேயர்' முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் எ‌ன்று கூ‌றினா‌ர் கோ.க.ம‌ணி.

Share this Story:

Follow Webdunia tamil