முன்னாள் அவைத் தலைவரும், தி.மு.க.வின் முக்கிய தலைவருமான மறைந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் முழு உருவ சிலையை மதுரையில் முதலமைச்சர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், பழனிவேல் ராஜனின் தந்தை பி.டி.ராஜன் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு நீதிக்கட்சி மாநாட்டில் நிறைவேற்றிய பெண்களுக்கும் பரம்பரை சொத்தில் பங்கு என்ற தீர்மானத்தை 1989 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் சட்டமாக கொண்டு வந்தோம் என்று கருணாநிதி கூறினார்.
பழனிவேல் ராஜனின் எண்ணங்களும், செயல்பாடுகளும் மாற்றுக் கட்சியினரும் போற்றும் வகையில் அமைந்திருந்தன என்று கூறிய கருணாநிதி, பழனிவேல் ராஜனின் மறைவு அவரது குடும்பத்தினரை விட என்னை மிகவும் பாதித்து விட்டது என்றார்.