திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டு மாவட்டமாக பிரிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இக்குழு அளிக்கும் அறிக்கையை ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மேலும் இந்த குழு உள்ளாட்சி பகுதி, எல்லைகளையும் மறுவரை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 4 கூடுதல் துறைமுகங்களை கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது'' என்று அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.