வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே இன்று அதிகாலையில் வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் பெண்கள் ஆவர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இன்று அதிகாலை 1.30 மணிக்கு தோட்டத் தொழிலாளர்கள் ஒரு வேனில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆம்பூர் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிரே வந்த லாரி மீது வேன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் ஆம்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.