அரியலூர் மாவட்டத்தில் ரூ.2.03 கோடி செலவில் ஆனைவாரி ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் பணி இந்த ஆண்டு நிறைவடையும் என்று மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ.2.03 கோடியில் இதுவரை ரூ.1.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, தொடர் மழை காரணமாக பணி முடிவடைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணி வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.12 கோடி செலவழிக்கப்பட்டது. இதற்காக இந்த ஆண்டு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.