''ஒகேனக்கல் பிரச்சினை பற்றி பேசியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருப்பது அவரது உயர்ந்த பண்பாட்டை காட்டுகிறது, அவரை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்'' என்று கே.வி.தங்கபாலு கூறினார்.'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக விவசாய விளைநிலங்களை கையகப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்காது. விவசாயிகளுக்கு பாதிப்பு வருமானால் அதை பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
அதே சமயம் சிறப்பு பொருளாதார மண்டலங்களால் பல்வேறு நன்மைகள் இருப்பதால் அவற்றை நாங்கள் வரவேற்கிறோம். இதற்காக விவசாய விளைநிலங்களை எடுக்கக்கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடு.
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்துவது குறித்து சார்க் மாநாட்டின் போது அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறார். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான வழி வகைகள் விரைவில் மேற்கொள்ளப் படும் என்று கருதுகிறேன்.
ரஜினி ஒகேனக்கல் பிரச்சினை பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருப்பது அவரது உயர்ந்த பண்பாட்டை காட்டுகிறது. அவரை யாரும் கொச்சை படுத்த வேண்டாம் என்று கே.வி.தங்கபாலு கூறினார்.