சுதந்திர தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், சென்னை அண்ணா விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக வரும் 20ஆம் தேதி வரை சென்னை விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை நேற்று (ஞாயிறு) நள்ளிரவு முதல் அமல் செய்யப்பட்டதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.