Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவை மக்கள் ஏற்கமாட்டார்கள் : ராமதாஸ்

திமுகவை மக்கள் ஏற்கமாட்டார்கள் : ராமதாஸ்
, ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2008 (13:36 IST)
வன்னியர்களுக்கு திமுக அடுக்கடுக்கான துரோகம் இழைத்துள்ளதாகவும், இனி கருணாநிதி ஆட்சிக்கு வரமுடியாது என்றும் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
.
விழுப்புரத்தில் நேற்று பாமக-வின் 20ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு திமுகவின் கோட்டையாக இருந்ததற்கு காரணம் அங்கிருந்த வன்னியர் தலைவர்களே. திமுக வரலாற்றில் வன்னியருக்கு குறைந்தபட்சம் துணைப் பொதுச்செயலாளர் பதவி கூட கொடுக்கப்படவில்லை என்று கூறினார்.

தமிழ்நாட்டை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தனி ஆவணம் தயாரித்துள்ள பாமகவா மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

``இனி முதல்வராக மாட்டேன் என்று கருணாநிதி கூறியுள்ளார். ஆமாம், மக்கள் இனிமேல் திமுகவையும், உங்களையும் ஏற்கமாட்டார்கள். தமிழகத்தை ஆளும் தகுதி பாமகவிற்கு உள்ளது'' என்று ராமதாஸ் பேசினார்.


Share this Story:

Follow Webdunia tamil