சென்னை, அம்பத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளைத் தாக்கிய அ.இ.அ.தி.மு.க கவுன்சிலர் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்ட்டார்.
வாக்காளர் பட்டியல் சேர்ப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம், அம்பத்தூர் நகராட்சி கவுன்சிலர் சந்திரன் என்பவர், ஒருவரது பெயரை பட்டியலில் சேர்க்கக் கோரி முறையிட்டார். ஆனால் அதிகாரிகள் மறுக்கவே அவர்களை கவுன்சிலர் தாக்கியதாக தெரிகிறது.
பின்னர் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, கவுன்சிலர் சந்திரன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.