Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மின் வெட்டை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!

மின் வெட்டை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (13:39 IST)
செ‌ன்னை மாநக‌ரி‌ல் நாளு‌க்கு நா‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கொலைக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை க‌ண்டி‌த்து‌ம், மி‌‌ன் வெ‌ட்டை க‌ண்டி‌த்து‌ம் அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நாளை செ‌ன்னை‌யி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது எ‌ன்று அ‌க்க‌‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்‌ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''சென்னை‌‌யி‌ல் நடைபாதை, பேரு‌ந்து ‌நிலைய‌‌ங்க‌ளி‌ல் படுத்து உறங்கும் ஏழை மக்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதுவரை 10 பேருக்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் மரணமடைந்து உ‌ள்ளன‌ர். செ‌ன்னை நக‌ரி‌ல் நாளு‌க்கு நா‌ள் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதனால், மக்கள் இரவு நேரங்களில் தூக்கத்தை மறந்து, பயத்தில் உறைந்து போய் உள்ளனர். இது போன்ற மர்மக் கொலைகளுக்கு காரணமானவர்கள் யார் என்பதை காவல் துறையினர் இது வரை கண்டறியவில்லை.

இதைவிட மோசமான நிலையில் ‌மி‌ன்சார‌த்துறை‌யி‌ன் செய‌ல்பாடு இருக்கிறது. இந்தத் துறைக்குகெ‌ன்று ஒரு அமைச்சர் இருக்கிறாரா என்ற சந்தேகம் தற்போது ம‌க்க‌‌ள் ம‌த்‌தி‌யி‌ல் நிலவுகிறது. செய‌‌‌ல் இழ‌ந்து‌‌ள்ள ‌மி‌ன்சார‌த்துறையா‌ல் வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர்கள், ஏழை எளிய, நடுத்தர வர்க்கத்தினர், நோயாளிகள், மாணவ- மாணவியர் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை க‌ண்டி‌க்கு‌ம் ‌விதமாக, செ‌ன்னை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக‌ம் மு‌ன்பு நாளை காலை 10 மணி‌க்கு அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil