கரூர் அருகே கோயில் விழாவில் முதல் மரியாதை கொடுப்பது தொடர்பாக இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் இடையாப்பட்டி கிராமத்தில் நேற்றிரவு நடந்த கோயில் விழாவில் முதல் மரியாதை கொடுப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு குடிசைகள் எரிக்கப்பட்டது.
இந்த மோதலில் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் குளித்தலை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மோதல் தொடர்பாக இரு பிரிவினரை சேர்ந்த 50 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த மோதலையடுத்து இங்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.