திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இன்று காலை இரு சக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
கோயிலுக்கு சென்று விட்டு திண்டுக்கல்லில் இருந்து சொந்த ஊரான கொடுக்கப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துள்ளானது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் சண்முகம் (52), மாணிக்கம் (19) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த தியாகராஜன், அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.