இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு தமிழக அரசு ஆதரவளித்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஆதரிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் தயங்காது. எனினும் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும்போது அதனை எதிர்க்கவும் தவறாது.
தமிழக அரசியலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து, புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மாநாட்டில் முடிவு செய்யப்படும்" என்றார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. அணுசத்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டன என்பது நினைவு கூறத்தக்கது.