தமிழகத்தில் இருந்து சிறிலங்காவுக்கு கடத்த முயன்ற மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதற்கு காரணமான நான்கு பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உப்பர் சத்திரம் அருகே உள்ள திருப்பாளைகுடியில் இருந்து சிறிலங்காவுக்கு மின்சாதன பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தையடுத்து, சிறப்பு காவல்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
உப்பர் சத்திரம் சோதனை சாவடியில் வந்த ஒரு வேனை காவல்துறையினர் சோதனை செய்தனர். இதில் 3,360 பேட்டரிகள், ஒரு ஹோண்டா ஜெனரேட்டர், ஒரு பண்டல் விடுதலைப்புலிகள் துணிகள், ஐந்து செல்பேசிகள், 11 உயிர் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் கவசங்கள், ஒரு துப்பாக்கி கவர், இரண்டு பேட்டரி சார்ஜர், ரூ.28,000 ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், கடத்த முயன்ற சிவராமன் (23), ரமணன் (32), விஜிலாஸ் நந்தன் அலிஸ் வாசு, விஜயா நிவிடன் அலிஸ் நவீன் (26) ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிவராமன் தவிர மற்றவர்கள் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் இருந்தவர்கள்.